கொரோனா சிகிச்சைக்காக விலை உயர்ந்த மருந்துகளை வாங்க முதல்வர் உத்தரவு!
கொரோனா சிகிச்சைக்காக விலை உயர்ந்த மருந்துகளை கொள்முதல் செய்ய முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்து இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் செய்தி குறிப்பில் கொரொனா வைரஸ் தொற்றை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தமிழக அரசு தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் நோக்கத்தோடு உயிர்காக்கும் விலை உயர்ந்த ஊசி மருந்துகளை தெரிவித்து பயன்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவை கழகம் சார்பில் ரெம்டெசிவர் உள்ளிட்ட விலை உயர்ந்த மருந்துகள் வாங்க கொள்முதல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு மருந்துகள் புறப்பட்டு வருவதாக விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.
இதுவரை பட்டிருக்கும் உயரிய உயிர்காக்கும் ஊசி மருந்துகள் மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். தேவையின் அடிப்படையில் கூடுதலாக மருந்துகள் தருவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






