--- --:--:-- --

நாளை முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து..!

14

தமிழ்நாட்டில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் வரும் திங்கள்கிழமை முதல் ஜூலை 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

தமிழ்நாட்டில் திருச்சியிலிருந்து விருத்தாசலம் வழியாக செங்கல்பட்டு, மதுரை, விழுப்புரம், கோவை, திருச்சியில் இருந்து மயிலாடுதுறை வழியாக செங்கல்பட்டு அரக்கோணம் – கோவை, கோவை – மயிலாடுதுறை மற்றும் திருச்சி – நாகர்கோவில் மார்க்கத்தில் தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

 

தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் படி இந்த ரயில்கள் வரும் திங்கள்கிழமை முதல் ஜூலை 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது. இந்த ரயில்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு முழு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புதுடெல்லிக்கு இயக்கப்படும் ராஜஸ்தானி சிறப்பு ரயில் அட்டவணை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

Leave a Reply

Right Menu Icon