ஜெயலலிதா பிறந்த நாளான பிப்., 24-ந் தேதி “பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்!” முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!
ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதியை மாநிலத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிவடைந்தவுடன் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி ஃ ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதியை தமிழக பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். பெண் சிசுக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக முதல்வர் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தமிழகத்தில், மாநில அளவில் குழந்தைகள் பாலின விகிதத்தை அதிகரிக்கும் முதல் மூன்று மாவட்டங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும், பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு 21 வயது நிரம்பும்போது ரூ.2 லட்சம் வழங்கும் வழங்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.





