--- --:--:-- --

161 டெண்டர்களை ரத்து செய்தது சென்னை மாநகராட்சி..!

10

மாநகராட்சி (GCC) நகரின் பல்வேறு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கான 161 டெண்டர்களை ரத்து செய்துள்ளது. இந்த டெண்டர்கள் திறக்கப்படுவதற்கு வெறும் 24 மணி நேரமே அவகாசம் அளிக்கப்பட்டிருந்ததால், ஏலதாரர்களுக்கான கால அவகாசம் பெருமளவு குறைக்கப்பட்டது. சில டெண்டர்களுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

 

 

இது குறித்து தி இந்து வெளியிட்டுள்ள செய்தியில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக இந்த டெண்டர்கள் யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. இந்த பணிகளில் பெரும்பாலானவை மாமன்ற உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதியின் கீழ் செயல்பட இருந்தவை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த வரையறுக்கப்பட்ட டெண்டர்கள் உரிய விதிமுறைகளின்படி கோரப்படாததால் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

 

ராயபுரம் மற்றும் அண்ணா நகர் போன்ற பகுதிகளில் பேருந்து நிழற்குடைகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக இந்த டெண்டர்கள் கோரப்பட்டிருந்தன. தற்போது டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், 2027 பிப்ரவரிக்குள் நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்குப் போதிய கால அவகாசம் இல்லை என்று சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

 

 

மேலும், இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு மாநகராட்சி நிர்வாகத்தை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தற்போதைய சென்னை மாநகராட்சி மன்றத்தின் கடைசி கூட்டம் 2027 பிப்ரவரியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் மருத்துவமனைகள், வகுப்பறைகள், பூங்காக்கள் மற்றும் பேருந்து நிழற்குடைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களை முடிக்க கவுன்சிலர்கள் விரும்புகின்றனர்.

 

 

சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட டெண்டர்கள் குறைந்த மதிப்புடையவை, இவை பெரும்பாலும் பராமரிப்பு தொடர்பான பணிகள் ஆகும். ஏலதாரர்கள் தங்களது டெண்டர் புள்ளி விபரங்கள் மற்றும் ஏலங்களையும் சமர்ப்பிப்பதற்கு முறையான கால அவகாசம் வழங்கப்படாததே இந்த ரத்து நடவடிக்கைக்கான காரணம்” என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

 

இதுகுறித்து சென்னை மாநகராட்சியின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்: இத்திட்டத்தை நாங்கள் படிப்படியாக செயல்படுத்துவோம். முதற்கட்டமாக, பள்ளிகளுக்கு அருகிலுள்ள பகுதிகளைக் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு உகந்ததாக மாற்ற அங்கு நடைபாதைகளை அமைக்க உத்தேசித்துள்ளோம். பள்ளி மண்டலங்களை குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதாக மாற்ற, முதற்கட்டமாக 50% சாலைகளில் நடைபாதைகளை அமைப்போம் என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon