--- --:--:-- --

அரசு மருத்துவமனையில் காயமடைந்தவருக்கு தூய்மை பணியாளர் அளித்த சிகிச்சை..!

3

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே படுகாயம் அடைந்தவருக்கு தூய்மை பணியாளர் சிகிச்சை அளிக்கும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்களை நிரப்பவில்லை என்று கூறப்படும் நிலையில் சிகிச்சைக்கு வந்த திமுக கவுன்சிலரின் உறவினரான கிருஷ்ணமூர்த்திக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்தை கொடுக்காமல் மாற்று மருந்தை வழங்கியதாக தெரிகிறது.

 

இதனால் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் மருத்துவர் பற்றாக்குறை இருப்பதாக மருத்துவர் தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற படுகாயம் அடைந்தவர்களுக்கு பெண் தூய்மை பணியாளர் மரத்துப்போகும் ஊசி செலுத்தி தையல் போடும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளது.

 

இது குறித்து மாவட்ட சுகாதார இணை இயக்குனர் பானுமதியிடம் கேட்ட பொழுது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 

Right Menu Icon