சிக்கன் பிரியாணியில் கிடந்த கோழி இறகு..!
சென்னையில் சிக்கன் பிரியாணியில் கோழி இறகு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் உணவகமாக பாண்டியன் ஹோட்டலில் மதிய நேரத்தில் உணவருந்த வந்த வாடிக்கையாளர்களுக்கு சிக்கன் பிரியாணியில் இறகுடன் கூடிய சிக்கன் பிரியாணியை விநியோகம் செய்துள்ளனர்.
இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் தெரிவித்தும் ஓட்டல் உரிமையாளர்கள் இதுபோன்று சிறிய தவறுகள் நடக்க தான் செய்யும் எனக் கூறியதால் அவர்கள் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் தற்போது அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.






