இனி நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு..!
செமஸ்டர் தேர்வுகளில் நேரடி எழுத்து தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. கொரொனா தொற்று காரணமாக பொறியியல் உட்பட அனைத்து கல்லூரிகளிலும் கடந்த ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன.
நோய்த்தொற்றின் காரணமாக பாதிப்பு குறைந்ததையடுத்து அனைத்து கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி முதுநிலை மற்றும் முழுநேர இன்ஜினியரிங் படிப்புக்கான தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் பி ஆர்க் படிப்பு மாணவர்களுக்கான கல்வி சுற்றுலாவுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதியளித்துள்ளது.






