--- --:--:-- --

சூரிய மின்சக்தி டெண்டர்களை ரத்து செய்த அமைச்சர்..!

5

சென்னையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், 2021-2026 வரையிலான முந்தைய திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து மின் ஒப்பந்ததாரர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரிடம் புகார் அளித்தனர்.தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம், முதல் திட்டமாக 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கும் திட்டத்தை அறிவித்தது.

 

 

இத்திட்டம் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தாலும், மின்துறையில் கடன் அதிகளவு இருக்கும்போது இலவச மின்சாரம் வழங்குவதாக சிலர் விமர்சனங்களும் செய்திருந்தனர், இதனிடையே, சென்னையில் நேற்று (மே 25) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், கடந்த ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து மின் ஒப்பந்ததாரர்கள் அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமாரிடம் புகார் அளித்துள்ளனர்.

 

 

இந்த புகாரில், ஒப்பந்ததாரர்கள் 20 சதவீதம் கமிஷன் தருவதாகக் கூறியும், அதிகாரிகள் 30-35 சதவீதம் வரை லஞ்சம் கேட்டு வற்புறுத்தியதாகத் தெரிவித்தனர். மேலும், சிறிய துணை மின் நிலையங்களுக்கான செலவை ரூ. 60 கோடி வரை அதிகாரிகளே உயர்த்தியதாகக் குற்றம் சாட்டினர். இதனிடையே ஏற்கனவே ரூ. 2,000 – 3,000 கோடி மதிப்பிலான சந்தேகத்திற்குரிய சூரிய மின்சக்தி டெண்டர்களையும், கூடுதல் விலைக்கு வாங்கப்பட்ட மின்மாற்றிகளையும் அமைச்சர் நிர்மல் குமார் ரத்து செய்துள்ளார்.

 

 

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க ஆட்சிக்கு வந்த சில வாரங்களிலேயே, வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் இக்கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. மின் வாரியத்தின் ரூ. 2.5 லட்சம் கோடி கடன் மற்றும் நுகர்வோர் சந்திக்கும் சிக்கல்களுக்கு மத்தியில், தவெக-வின் இந்த ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

 

 

இது குறித்து, தூத்துக்குடி அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் செயலாளர் ஹீராராஜன் அளித்த பேட்டியில், கடந்த ஆட்சியில், அமைச்சர் வீட்டில் தான் கமிஷன் வாங்கப்பட்டது. எல்லோருமே அவ்வளவு காசு அடித்திருக்கிறார்கள். ஒரு ஆண்டுக்கு ஒரு ஸ்டேஷனில் ரூ60 கோடி வாங்கி இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் பல ஸ்டேஷன்கள் இருக்கிறது. மத்த ஸ்டேஷன்களில் இந்த தொகை மாறுபடும். அவர்களுடன் ஒத்துபோகிறவர்கள், கமிஷன் அதிகம் கொடுக்கிற ஒப்பந்தாரர்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

 

இது குறித்து புகார் அளிக்க தான் இந்த கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் எங்களிடம் இன்னும் என்னென்ன இருக்கிறதோ கொண்டு வாருங்கள் என்று அமைச்சர் கூறியுள்ளார். இந்த அரசு மற்றும் அமைச்சரின் செயல்பாடு மிகுந்த நம்பிக்கை அளிக்கும் விதமாக இருக்கிறது. மாற்றத்தை விரும்பி ஓட்டு போட்டோம். ஆனால் இவ்வளவு பெரிய மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon