--- --:--:-- --

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு..!

7

மிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக நீலகிரி, கோவை, தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் திருப்பத்தூர், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரின் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon