--- --:--:-- --

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!

2

மிழகத்தில் ஏப்ரல் 2ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும்.

 

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை மற்றும் ஏப்ரல் 1ம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் ஏப்ரல் 2ம் தேதி இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

அதேபோல், கோயம்பத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி, விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோயம்பத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஏப்ரல் 3ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஏப்ரல் 1 முதல் 3ம் தேதி வரை படிப்படியாக 2 – 3° செல்சியஸ் குறையக்கூடும். தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2- 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

 

அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.

Right Menu Icon