--- --:--:-- --

1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு அறிவிப்பு..!

1

வெயிலின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே ஆண்டுத் தேர்வு நடைபெறும் எனவும் அதன்படி ஏப்ரல் 7ஆம் தேதி தேர்வு தொடங்கி 17ஆம் தேதி முடிவடைகிறது எனவும் தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: – தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 09.04.2025 முதல் 21.04.2025 வரை மூன்றாம் பருவத் தேர்வு / ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

 

தற்போது தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் உத்தரவின்படி, தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன.இதன்படி, 07.04.2025 முதல் 17.04.2025 வரை தேர்வுகள் நடைபெறும் என தொடக்கக் கல்வி இயக்கநகம் தெரிவித்துள்ளது.

Right Menu Icon