--- --:--:-- --

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

3

மிழ்நாட்டில் மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழக மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குமரி கடல், மன்னார்வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Right Menu Icon