--- --:--:-- --

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

3

ளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. கோவில்பட்டியில் பள்ளி வாகனம் சிக்கியதால் மாணவர்கள் அச்சம் அடைந்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு இடைவெளி விட்டு கனமழை பெய்தது.

 

அண்ணா சாலை, கிண்டி, வடபழனி, மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. புறநகர் பகுதியான ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்தனர்.

 

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சுற்றுவட்டாரத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon