பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து தானாக நகர்ந்து வந்த சிசிடிவி காட்சி..!
ஆந்திர மாநிலம் நெல்லூரில் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து தானாக நகர்ந்து வந்து பயணிகள் காத்திருப்பு பகுதியில் உள்ள தூணின் மீது மோதி நின்ற காட்சி வெளியாகியுள்ளது.
அரசு பேருந்தின் ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி விட்டு சென்ற பிறகு எதிர்பாராதவிதமாக பேருந்து தானாக நகர்ந்து பயணிகள் காத்திருப்பு பகுதியில் இருந்து குன்றின் மீது மோதி நின்றது.
நள்ளிரவு நேரத்தில் பயணிகள் யாரும் இல்லாத காரணத்தினால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.







