--- --:--:-- --

கல்லூரியில் கஞ்சா..! பேராசிரியர் எடுத்த வீடியோ இணையத்தில் வைரல்..!

7

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கஞ்சா புகைப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரியில் நூலகம் இருக்கக்கூடிய பகுதியில் சில மாணவர்கள் கஞ்சா பயன்படுத்துவதை தெரிந்து அந்த கல்லூரியின் பேராசிரியர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

 

கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது. பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீசாரிடம் இந்த வீடியோவை காண்பித்து அவர் புகாரை தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் கல்லூரியில் பயின்ற மூன்று பேரை அங்குள்ள காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon