--- --:--:-- --

ரசாயனத்தால் பழுக்க வைக்கப்பட்ட 14 டன் பழங்கள் பறிமுதல்..!

6

கோவையில் ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 14 டன் மாம்பழங்கள் மற்றும் சாத்துக்குடி பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உக்கடம் பகுதிகளில் பழ கடைகளில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

 

ரசாயனம் தடவி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பழங்களின் மொத்த மதிப்பு 8 லட்சத்து பத்தாயிரம் ரூபாய் என உணவுத்துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழ கடைகளைத் தொடர்ந்து ஷவர்மா கடைகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

 

Right Menu Icon