--- --:--:-- --

சீனாவில் வேகமாக பரவி வரும் புருசெல்லா வைரஸ்..!

12

கொரொனாவை தொடர்ந்து சீனாவில் வேகமாக பரவி வரும் புருசெல்லா வைரஸால் இதுவரை 3245 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வடமேற்கு சீனாவின் கான்சு மாகாணத்திலுள்ள உயிரியல் மருந்து நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் புருசெல்லா பாக்டீரியா கசிந்துள்ளது.

 

இதனால் மால்டா பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கொடிய புருசெல்லா பாக்டீரியா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3240 என்ற பெயருக்கு புருசெல்லா தொற்று இருப்பது கண்டறியப் பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

இந்த பாக்டீரியா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலை வலி, தசை வலி, காய்ச்சல், சோர்வு மற்றும் நாள்பட்ட மூட்டு வலி ஆகியவை ஏற்படலாம் என நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளது.

 

இந்த தொற்று மனிதனுக்கு பரவுவது அரிதானது என்றும் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் விலங்குகளாலும் நோய் பரவக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon