சிறையில் சிகரெட் கேட்கும் நடிகை சஞ்சனா கல்ராணி..!
நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதியும் பார்ட்டிகளில் சிகரெட் மது போதை பொருட்களை தாராளமாக பயன்படுத்தி வந்தவர்கள் என கூறப்படும் நிலையில் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
முக்கியமான வழக்கில் கண்காணிப்பில் இருப்பதால் சிறையில் சிகரெட் கிடைக்காமல் தவிப்பதாகவும் ஒரே ஒரு சிகரெட்டையாவது ஏற்பாடு செய்யுங்கள் என சிறைக் காவலர்களிடம் கெஞ்சியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பெண் காவலர்கள் மறுப்பு தெரிவித்ததால் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் செல்லப்படுகிறது. இது ஒருபுறமிருக்க கன்னட திரை உலகினருக்கு போதை பொருள் சப்ளை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த லூம் பெப்பர், ராகினி திவேதி போதை பொருளை சப்ளை செய்ததை ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்படும் போதை மாத்திரைகளை ராகினி திவேதிக்கும், அவரது நண்பரான ரவிசங்கரும் பலமுறை வழங்கியதாகவும் ஒரு கிராம் கொக்கைன் 6,000 ரூபாய் என்ற விலையில் ராகினி வாங்கியதாகவும் லூம் கூறியுள்ளார்.
ஜெயின் என்ற மற்றொரு நபரிடம் போதை மாத்திரைகள் வாங்கி ராகினியும், ரவிசங்கரும் பயன்படுத்தியதை விசாரணையில் போலீசார் உறுதிப்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ராகினியின் ஜாமின் மனு மீதான விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அவருக்கு ஜாமீன் கிடைப்பது சந்தேகமே எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே போதைப்பொருள் விவகாரத்தில் கன்னட நடிகர் பாலாஜி தயாரிப்பாளர் சந்தோஷ்குமார் முன்னாள் எம்எல்ஏ தேவராஜ் ஆகியோர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு நேரில் ஆஜராக உள்ளனர்.






