கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட பேடிஎம் மீண்டும் சேர்க்கப்பட்டது..!
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட பேடிஎம் செயலி 4 மணி நேரத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டது. பண பரிமாற்றம் தவிர காப்பீடு வங்கி சேவை உள்ளிட்ட சேவைகளை வழங்கும் பேடிஎம் சீரியலில் விளையாட்டு சூதாட்டம் தொடர்பான விதிகளை பின்பற்றவில்லை என கூறி கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டது.
தற்காலிகமாகவே கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாகவும் பயனர்களின் பணம் மிகவும் பாதுகாப்பாகவே இருக்கும் என்பதால் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் பேடிஎம் நிறுவனம் அறிவித்தது.
தொடர்ந்து பேடிஎம் நிறுவனம் தன் செயலியில் இருந்து சர்ச்சைக்குரிய காஷ் பேக் பகுதியை நீக்கியதை அடுத்து கூகுள் ப்ளே ஸ்டோரில் பேடிஎம் செய்து மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.






