சென்னை பப்பில் இளம்பெண்ணை ஒருமையில் திட்டி தாக்கிய பவுன்சர்..!
சென்னையில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் பவுன்சர் இளம்பெண்ணை தாக்கிய விவகாரத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது நண்பரின் பிறந்த நாளை கொண்டாட சகோதரி மற்றும் நண்பர்களுடன் நந்தனத்தில் உள்ள தனியார் பப்புக்கு சென்றுள்ளார்.
அப்பொழுது அங்கு பணியில் இருந்த பவுன்சர் யோகேஷ் என்பவர் அவர்களை உள்ளே விட மறுத்து ஒருமையில் பேசி இளம் பெண்ணை தள்ளிவிட்டுள்ளார். காயமடைந்த இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் பெண்களை துன்புறுத்தி ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி ஆபாசமாக பேசுவதற்காக சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.





