--- --:--:-- --

தமிழகத்தில் அதிமுகவை பயன்படுத்தி பாஜக காலூன்ற பார்க்கிறது..!

8

மிழகத்தில் அதிமுகவை பயன்படுத்தி பாஜக காலூன்ற பார்க்கிறது என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை வண்டியூர் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது.

 

அதில் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாநாட்டில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும்.

 

ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடி தலைமையிலான அரசு சொந்த நாட்டு மக்கள் மீதே பொருளாதார தாக்குதல் நடத்துகிறது என்றும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வதே மோடி அரசு மக்களுக்கு தரும் பரிசு எனவும் விமர்சித்துள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon