பாரதி கண்ணம்மாவுக்கு பின் கிடைக்காத வாய்ப்பு..!
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பா ரோலில் நடித்து பாப்புலர் ஆனவர் ஃபரினா ஆசாத். அவரது நடிப்புக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.
பாரதி கண்ணம்மா முடிந்தபிறகு ஃபரினா அதே சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்தார். ஆனால் அதற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் அந்த சீரியல் சில மாதங்களிலேயே முடிக்கப்பட்டது.
ஃபரினா அடுத்து எந்த புது சீரியலிலும் நடிக்காமல் இருக்கிறார். இந்நிலையில் புது வாய்ப்புக்காக தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருக்கிறார் அவர். தற்போது தலைகீழாக அவர் தொங்கி யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.





