செல்போன் சார்ஜர் வெடித்த விபத்தில் இரட்டை குழந்தைகள் உட்பட தாயும் பலி..!
கரூரில் செல்போன் சார்ஜர் வெடித்த விபத்தில் தாய் மற்றும் இரட்டை குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை பிரிந்து முத்து லக்ஷ்மி என்பவர் 3 வயது இரட்டை ஆண் குழந்தைகளுடன் ராயனுரில் வசித்து வந்துள்ளார்.
அவர் வீட்டில் இருந்து இன்று காலை 6 மணி அளவில் புகை வெளியே வந்ததால் அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். கதவை உடைத்து உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள் உடல் கருகி உயிரிழந்த முத்துலட்சுமியையும் மயங்கி கிடந்த இரண்டு குழந்தைகளையும் மீட்டு உள்ளனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தைகள் இருவரும் உயிரிழந்தனர். விசாரணையில் சுவிட்ச் போர்டில் இருந்து படுக்கை அருகே மின் இணைப்பு பெட்டி வைத்து அதிலிருந்து செல்போனுக்கு சார்ஜ் போட பட்டதாக கூறப்படுகிறது.
அதில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டு முத்துலட்சுமியும் அவரது 3 வயது குழந்தைகள் இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது.






