--- --:--:-- --

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை..!

1

ருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது.

 

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஜூலை 1ஆம் தேதி முதல் உற்பத்தி செய்யவோ அல்லது இறக்குமதி செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை சேமித்து வைப்பது, விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பிளாஸ்டிக் குச்சி பொருத்தப்பட்ட பலூன், பிளாஸ்டிக் கொடி, ஐஸ்க்ரீம் குச்சிகள், தர்மாகோல், பிளாஸ்டிக் பத்திரிகைகள், சிகரெட் அட்டைகள் 100 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பிவிசி பாலர்கள் ஆகியவைகளை பயன்படுத்த முடியாது.

 

ஜூன் 30-ஆம் தேதிக்குள் மேற்கண்ட பொருட்களின் இருப்பு பூஜ்ஜியம் என்ற நிலைக்கு கொண்டு வர வேண்டுமென உத்தரவிட்டுள்ள மத்திய அரசு ஜூலை 1ஆம் தேதி முதல் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு இத்தகைய பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப் பட்டால் செய்து அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Right Menu Icon