பாலியல் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவிக்கத் தடை..!
பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, சிறைத்துறை டிஜிபி பரிந்துரையை ஏற்று, அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் பாலியல் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவிக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது.
இதை சுட்டிக்காட்டி, அனைத்து சிறை அதிகாரிகளுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பாலியல் குற்றவாளிகளை முன்கூட்டி விடுவிக்க பரிந்துரைக்க கூடாதென வலியுறுத்தியுள்ளார்.





