இயக்குநர் அவதாரம் எடுத்த ரேவதி..!
நடிகை ரேவதி ஒரு புதிய வெப் தொடரை இயக்கி வருகிறார். அவருடன் இணைந்து சித்தார்த் ராமசாமி என்பவரும் இயக்குகிறார். அதில், பிரியாமணி, ஆரி, சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் வெப் தொடரின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இது வெளியாகும் என கூறப்படுகிறது.





