சிறுவர் பூங்காவில் 170 வெடிகுண்டுகள்..நடுங்கிய போலீஸ்.!
இங்கிலாந்தில் சிறுவர் பூங்காவில் 170 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சிறுவர் பூங்காவில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வந்தது. அப்பொழுது அங்கு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் போலீசாரிடம் தகவலளித்தனர். அதன் பேரில் மோப்பநாய் உதவியுடன் அங்கு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதனிடையே அந்த வெடிகுண்டுகள் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் வைக்கப்பட்டது என்பது உறுதியானது.
இதனால் பூங்காவில் மற்ற இடங்களை தோண்டி பார்க்க அதிகாரிகள் முடிவு செய்த நிலையில் அந்த பகுதியில் 170 க்கும் மேற்பட்ட வெடிக்காத குண்டுகள் கண்டெடுக்கப்பட்டது.





