--- --:--:-- --

மும்மொழி கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயற்சி..!

2

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ எழிலன், “ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தக் கொள்கையை தேசிய கல்விக்கொள்கையின் மூலமாக திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது” என குற்றஞ்சாட்டினார்.

 

“மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம்” என திட்டவட்டமாக கூறிய எழிலன், “இந்தி திணிப்புக்குத்தான் தாங்கள் எதிரி என்றும், இந்தியை விரும்புபவர்கள் படிக்கலாம்” என்றும் கூறினார்.

 

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என்ற அவர், தமிழக அரசின் திட்டங்களால் மாணவர்களின் கற்றல் திறன் உயர்ந்துள்ளதாக கூறினார். “தமிழ்நாட்டில் மத்திய அரசின் கே.வி. பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே இல்லை” என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

Right Menu Icon