திருப்பூர் தெற்கு வட்டார அளவில் நடந்த கலைத்திருவிழா.. “ஜெய்வாபாய் பள்ளி மாணவிகள் அணியினர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனை!”
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளின் தனித்திறமையை வெளிக்கொணரும் வகையில் கலைத்திருவிழாவை தமிழக அரசு நடத்தி வருகிறது. பள்ளி அளவில், வட்டார அளவில், மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் நடத்தப்பட்டதில் சுமார் 25 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். மாநில அளவில் வெற்றி பெறுபவர்களை வெளிநாட்டுக்கு அழைத்து செல்லவும் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.
இந்த போட்டியானது 9 பிரிவுகளில் 85 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் திருப்பூர் தெற்கு வட்டார அளவில் 79 அரசு பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதன்அடிப்படையில் திருப்பூர் தெற்கு வட்டார அளவில் நடந்த கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா கே.எஸ்.சி அரசு மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் நடந்தது. விழாவுக்கு திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கநிலை) அமுதா தலைமை தாங்கினார்.
தெற்கு வட்டார கல்வி அலுவலர்கள் ஜஸ்டின் ராஜ், ஜோதி பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கே.எஸ்.சி பள்ளி தலைமையாசிரியர் சிவகுமார் வரவேற்றார். திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் அதிக புள்ளிகள் எடுத்த ஜெய்வாபாய் பள்ளி அணிக்கு ஒட்டுமொத்த சாம்பியனுக்கான கோப்பையையும் வழங்கினார்.
அதேபோல் 9 – 10 ஆம் வகுப்பு தனிநபர் திறமை பிரிவில் நுண்கலை பிரிவில் எதிர்கால கனவை வரைதல் போட்டியில் ஹெருனி முதலிடம், இலக்கிய காட்சிகள் ஓவியம் வரைதலில் ஆர்.கோபிகா முதலிடம், பானை ஓவியத்தில் எஸ்.கோபிகா 2 – ம் இடம், காகிதக்கூழ் பொருட்கள் செய்வதில் சுவேதா 2 – ம் இடம், காய்கறி, சோப்பு, போன்ற பொருட்களை உபயோகப்படுத்தி செய்யும் செதுக்கு சிற்பம் போட்டியில் ஜனனி முதலிடம், புகைப்படம் எடுத்தலில் பிரித்திகா 2 – ம் இடம், வாய்ப்பாட்டு மெல்லிசையில் சங்கமித்ரா முதலிடம், பொம்மலாட்டத்தில் பூவரசி முதலிடம், செவ்வியல் நடனத்தில் ராகவர்ஷினி முதலிடம், பிற மாநில நாட்டியம் தனிநபர் பிரிவில் நந்திதா தாஸ் முதலிடம், மேற்கத்திய நடனத்தில் ஷர்மி 2 -ம் இடம், தனிநபர் நடிப்பில் ஜான்சி முதலிடம், தமிழ் பேச்சுப் போட்டியில் சுபஸ்ரீ முதலிடமும் போட்டியின்போது கொடுக்கப்படும் தலைப்பில் நடந்த ஆங்கில பேச்சுப்போட்டியில் காணென் உஷ்
மேலும், குழுபோட்டியில் வில்லு
11- 12 ஆம் வகுப்பு தனிநபர் திறமை பிரிவில் நுண்கலை தலைப்பை ஒட்டி வரைதல் பிரிவில் பர்வதவர்தினி முதலிடம், எதிர்கால கனவை வரைதலில் நிலா 2 – ம் இடம், கேலி சித்திரத்தில் நெளபியா ஜெஸ்மி முதலிடம், காகித வேலையில் சுபஸ்ரீ முதலிடம், களிமண் சிற்பம் செய்வதில் பிரகலா 2 ம் இடம், காய்கறி, சோப்பு, போன்ற பொருட்களை உபயோகப்படுத்தி செய்யும் செதுக்கு சிற்பம் போட்டியில் முத்துச்செல்வி முதலிடம், புகைப்படம் எடுத்தலில் சீத்தா 2 – ம் இடம், நாட்டுப்புறப்பாட்டு பிரிவில் சிண்டெல்லா 2 ம் இடம், செவ்வியல் இசை வாய்ப்பாட்டில் லாவண்யா முதலிடமும் பெற்றனர்.
மேலும், வயலின் வாசிப்பதில் மார்கரெட் டோரா முதலிடம், பொம்மலாட்டத்தில் கவ்சிகா முதலிடம், நாட்டுப்புற நடனத்தில் நூர்ஜகான் 2 -ம் இடம், செவ்வியல் நடனத்தில் ராஜா அக்ஷயா முதலிடம், பிரீ ஸ்டைல் என்னும் பிறவகை நடனத்தில் பூமிகா 2 -ம் இடம், தமிழ் பேச்சுப்போட்டியில் ரிதுஜா முதலிடம், கட்டுரை போட்டியில் சித்ரா 3 ம் இடமும், ஆங்கில பேச்சுப்போட்டியில் அக்ஷயா 2 ம் இடம், அதிகாரம் வாரியாக திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பிரமிகா முதலிடம், தமிழ் கவிதை புனைதலில் பிரீத்தி 2 -ம் இடம், தமிழ் கவிஞர்களின் பாடல் ஒப்புவித்தல் பிரிவில் வித்யாஸ்ரீ முதலிடம், ஆங்கில கவிதை ஒப்புவித்தலில் தாரணி 2 -ம் இடம், பிற மாநில மொழிகளில் கவிதை சொல்லுதலில் ராகவர்தினி முதலிடம், இணைய தள கருத்துவாக்கம் பிரிவில் சுல்தானா அஃப்ரின் முதலிடமும், மேற்கத்திய நடனத்தில் பிருந்தா 3 ம் இடமும், பெற்றுள்ளனர்.
அதேபோல் குழுபோட்டியில் கரகாட்டத்தில் பிரியதர்ஷினி குழுவினர் முதலிடம், ஒயிலாட்டத்தில் ஜெபப்ரியா குழுவினர் 2 -ம் இடம், தேவராட்டத்தில் அனுசுயா குழுவினர் 2 -ம் இடம், கோலாட்டத்தில் சந்தியா குழுவினர் முதலிடம், நாட்டுப்புற நடனத்தில் முதலிடம், செவ்வியல் நடனத்தில் ராஜஅக்ஷயா குழுவினர் முதலிடம், பிற மாநில நாட்டியத்தில் லட்சுமி நந்தினி குழுவினர் 2 -ம் இடம், பிரீ ஸ்டைல் என்னும் பிறவகை நடனத்தில் ரேணுகா தேவி குழுவினர் முதலிடம், தெருக்கூத்தில் மனோ ரஞ்சிதம் குழுவினர் 2 -ம் இடம், வீதி நாடகத்தில் மீனா குழுவினர் 2 -ம் இடம், இலக்கிய நாடகத்தில் (மகாபாரதம்) லோகநாயகி குழுவினர் முதலிடம், பாவனை நடிப்பு பிரிவில் அனிஷ் ஃபாத்திமா குழுவினர் 2 -ம் இடம், விவாத மேடையில் கலையெழில் குழுவினர் முதலிடத்தையும், பேண்ட் வாத்தியத்தில் யாழினி குழுவினர் 3 ம் இடமும் பெற்றுள்ளனர்.

இறுதியில் ஜெய்வாபாய் பள்ளி மாணவிகள் 80 வகை பிரிவுகளில் தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் கலந்துகொண்டு 43 போட்டிகளில் முதலிடத்தையும், 28 போட்டிகளில் 2 ம் இடத்தையும், 7 போட்டிகளில் 3 ம் இடத்தையும் என 78 போட்டிகளில் 200 க்கும் மேற்பட்ட ஜெய்வாபாய் பள்ளி மாணவிகள் அணியினர் வெற்றி பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்று இமாலய சாதனை படைத்துள்ளனர். போட்டிகளை ஆசிரியர்கள் பாபு, சுப்பிரமணி, ராஜேஷ், பூபாலன், அர்ஜுனன், சரவணன், முருகானந்தம், அக்பர் அலி ஆகியோர் கொண்ட ஆசிரியர்கள் குழுவினர் ஒருங்கிணைப்பாளராக இருந்து நடத்தினர். முடிவில் திருப்பூர் தெற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு ) அலிமா பீவி நன்றி கூறினார். முதல் மற்றும் 2 ம் இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயமும், 3 ம் இடம் பிடித்தார்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
பள்ளி கலையரங்கில் நடந்த பரிசளிப்பின்போது ஜெய்வாபாய் பள்ளி அணி என்று அறிவிக்கும்போதெல்லாம் மாணவிகள் சத்தம்போட்டு ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். பின்னர் ஒன்று கூடிய ஜெய்வாபாய் பள்ளி மாணவிகள் ஒருவருக்கொருவர் கட்டியணைத்தும், கைகுலுக்கியும் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டதுடன் பின்னர் குரூப் போட்டோவும் எடுத்து கொண்டனர். கே.எஸ்.சி பள்ளி கலையரங்கில் இருந்த அனைவரும் ஜெய்வாபாய் பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.





