இவிஎம் மெஷினை சுற்றி சுற்றி 2 கிலோமீட்டர் ரெட் சோனாக அறிவிப்பு..!
தூத்துக்குடியில் இவிஎம்-கள் வைக்கப்பட்டுள்ள வ.உ.சி பொறியியல் கல்லூரியைச் சுற்றி 2 கிலோ மீட்டரில் உள்ள பகுதிகள் அனைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ.உ.சி பொறியியல் கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அந்த பகுதியை சுற்றி இரண்டு கிலோமீட்டர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ரெட் ஜோனாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் நாள் வரை டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.





