கொரியரில் போதை பொருள் கடத்தல்.. போலீசாரின் சோதனையால் பரபரப்பு..!
புதுச்சேரியில் உள்ள கொரியர் நிறுவனங்களில் போதை தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் போதை கொள்ள நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அமைப்பை தொடங்கி புதுச்சேரி போலீசார் பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் பல்வேறு கடைகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள கொரியர் நிறுவனங்கள் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் உதவியாளர் ஜாகிர் உசேன் தலைமையில் நெல்லி தோப்பு, 45 அடி சாலை, வெங்கடா நகர் வீட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள கொரியர் நிறுவனங்களின் மோப்பனாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
ஆனால் போதை பொருள் சிக்கவில்லை. இந்நிலையில் சந்தேகத்திற்கான பார்சல் எதுவும் வந்தால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கொரியர் நிறுவனத்திற்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.





