--- --:--:-- --

அரசு மருத்துவமனையில் பெண்ணிடம் தாலி சங்கிலியை பறிக்க முயற்சி..!

9

ரசு மருத்துவமனையில் பெண்ணிடம் தாலி சங்கிலியை பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மேட்டூர் அரசு மருத்துவமனையில் நபர் ஒருவர் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

 

மருத்துவமனையில் இருந்த அவருக்கு உதவியாக மனைவி மாலதி தங்கி இருந்தார். அவருக்கு மர்ம நபர் ஒருவர் மாலதியின் கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் தாலிச் செயினை பறிக்க முயன்றார்.

 

மாலதி சுதாரித்துக் கொண்டு சத்தம் போட்டதும் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்து மாலதி அளித்த புகாரின் பேரில் போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon