--- --:--:-- --

என்னா அவசரமோ..?ஊரடங்கு தளர்வு என்றவுடன் ஆரம்பிச்சுட்டாங்கப்பா..! 20-ந் தேதி முதல் டோல் கேட்களில் வசூல் ஆரம்பம்!!

6.1

ஊரடங்கில் தளர்வு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், நாடு முழுவதும் வரும் 20-ந் தேதி முதல் டோல்கேட் களில் கட்டண வசூல் செய்யப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் மே 3-ந்தேதி வரை பொதுப் போக்குவரத்துக்கு தடை நீடிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், டோல்கேட் களில் ஏன் இந்த அவசர வசூல் என எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

 

நாடு முழுவதும் நான்கு வழிச்சாலைகள் அமைக்கப்பட்டது முதல், 40 கி.மீ.தொலைவுக்கு ஒரு சுங்கச்சாவடி என அமைத்து, சுங்கக் கட்டணம் என்ற பெயரில் அடாவடி வசூல் வேட்டை ஜரூராக நடைபெறுகிறது. லாரி போன்ற சரக்கு வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் மிக அதிக அளவில் வசூல் செய்யப்படுவது, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வுக்கும் காரணமாக பார்க்கப்படுகிறது.

 

கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ந் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும், சுங்கச்சாவடிகளில் வசூல் வேட்டை தொடர்ந்தது. இதனால் ஊரடங்கு நேரத்துக்கு முன் சொந்த ஊர்களுக்கு சென்று விட வேண்டும் என வாகனங்களில் படையெடுத்தவர்களிபம், சுங்கச்சாவடிகள் கெடுபிடி வசூலை தொடர்ந்தன. சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகம் இருந்த நிலையில், டோல்கேட்களில் பல கி.மீ. தூரத்துக்கு வாகன நெரிசல் ஏற்பட்டு கால விரயம் ஏற்பட்டது.

 

இதைக் கேள்விப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், கொரோனா பீதியில் நாடே பதற்றத்தில் அல்லாடும் போது சுங்கச்சாவடிகளில் வசூல் அவசியமா? என்று சாட்டையை சுழற்றியதால், உடனடியாக சுங்கச்சாவடிகள் அனைத்தும் கட்டண வசூலை நிறுத்தின.

 

தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் உள்ளிட்ட பணியாளர்களின் வாகனங்கள், அவசரத் தேவைக்காக அனுமதி பெற்று செல்வோர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டுமே சாலைகளில் சென்று வருகின்றன.

 

இந்நிலையில், வரும் 20-ந் தேதி முதல் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்படும். சில குறிப்பிட்ட உற்பத்திதொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதே வேளையில், ஊரடங்கு அமலில் உள்ள மே 3-ந்தேதி வரை நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்துக்கு தடை நீடிக்கும் என்றும் மத்திய அரசு அறிவித்கள்ளது.

 

வரும் 20-ந் தேதி முதல் ஊரடங்கில் தளர்வு என மத்திய அரசு அறிவித்தது தான் தாமதம், நாடு முழுவதும் அன்று முதலே சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் தொடங்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா பீதியில் நாடே இக்கட்டான சூழலில், ஊரடங்கும் அமலில் உள்ள நிலையில் சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் என்ற அறிவிப்புக்கு பெரும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. தற்போது சாலைகளிலும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டுமே அதிகம் செல்லும் நிலையில், டோல்கேட் கட்டணம் வசூலித்தால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது என்றும், இப்போது ஏன் அவசரம் என்று கூறி எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

 

ஆனால், நெடுஞ்சாலை ஆணையமே வேறு கணக்கு சொல்கிறது. ஏற்கனவே இந்த ஆணையம் கடும் கடன் சுமையில் உள்ளதாகவும், கடந்த 20 நாட்களாக டோல்கேட்களில் வசூலை நிறுத்தியதால் மட்டும் 18 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் என்றும் கூறியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon