--- --:--:-- --

மீண்டும் 1,200 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி : பாரிவேந்தர் வாக்குறுதி

5

ரூரில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் பரப்புரை மேற்கொண்டார். தோகைமலை, பழுப்பூர், கல்லை, நெய்தலூர் ஆகிய பகுதிகளில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருமான டாக்டர் பாரிவேந்தர் பரப்புரை செய்தார்.

 

அப்பொழுது அவர் பேசுகையில் 118 கோடி ரூபாய் சொந்த செலவில் 1,200 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி அளித்துள்ளதாகவும் இந்த முறையும் இதனை செயல்படுத்த உள்ளதாகவும் வாக்குறுதி அளித்தார்.

 

மேலும் பெரம்பலூரில் 1500 ஏழை எளிய குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை இலவச உயர் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.

 

Right Menu Icon