--- --:--:-- --

ஏ.ஆர்.ரகுமானுடன் தர்காவுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த்..!

14

டிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் கடப்பாவில் உள்ள புகழ்பெற்ற தர்காவில் தொழுகை நடத்தினர். நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை மகள் ஐஸ்வர்யாவுடன் திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட்டார்.

 

தொடர்ந்து கடப்பாவில் உள்ள புகழ்பெற்ற தர்காவுக்கு சென்றார். அதே நேரத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அங்கு வந்தார். இருவருக்கும் தர்காவில் முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு பேரும் தர்காவில் தொழுகை நடத்தினர்.

 

ஒரே நேரத்தில் புகழ்பெற்ற இரண்டு பேரும் ஒன்றாக வந்ததால் அவர்களை காண ஏராளமானோர் குவிந்து வந்தனர். எனவே அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

 

Right Menu Icon