அமமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெறுகிறது..!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 25ஆம் தேதி நடைபெறும் என அந்தக் கட்சியின் தலைவர் பொதுச் செயலாளர் டி வி தினகரன் அறிவித்துள்ளார்.
கட்சியின் துணைத் தலைவர் எஸ் அன்பழகன் தலைமையில் காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் தமிழகத்தின் 10 இடங்களில் இருந்து காணொலி வாயிலாக உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர்கள் முறையான அழைப்பிதழோடு கொரொனா கால விதிமுறைகளை பின்பற்றி கூட்டத்தில் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.






