தென் தமிழகம் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..!
தென் தமிழகம் டெல்டா மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடக்கு கேரளாவை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
வடதமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென் தமிழக மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வரும் 24ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






