மாற்று ஜாதி பெண்ணை காதலித்த இளைஞர்.. கத்தியால் குத்தி கொலை..!
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் மாற்று சமூகப் பெண்ணை காதலித்த 19 வயது இளைஞர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அக்குவிலை ஊராட்சியை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளியான கண்ணியப்பன் என்பவர் மகன் முத்தையா.
தன்னுடன் பணிபுரியும் பெண்ணை காதலித்து வந்துள்ளார். முத்தையா வேறு சமூகம் என்பதால் பெண்ணின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டிற்கு வந்த காதலியை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இரவு 8 மணி அளவில் நண்பரை பார்ப்பதாக கூறி வெளியே சென்ற முத்தையா வெகு நேரமாகியும் திரும்பி வராததால் அவரது சகோதரர்கள் தேடிய பொழுது அருகில் உள்ள காட்டுப் பகுதியில் கழுத்து, முதுகு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் கத்தியால் கட்டப்பட்டு சடலமாக கடந்துள்ளார்.
இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் காதல் விவகாரத்தில் நடந்த கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.





