--- --:--:-- --

கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற பெண்..!

3

டலூர் மாவட்டம் வடலூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். கோட்டக்கரை பகுதியை சேர்ந்த 50 வயதான சரஸ்வதி வீட்டின் பின்புறம் உள்ள 80 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.

 

கிணற்றில் குறைந்த அளவிலேயே தண்ணீர் இருந்ததால் தத்தளித்துக் கொண்டிருந்த மனைவியை பார்த்து அவரது கணவர் மகாலிங்கம் கொடுத்த தகவலின் பேரில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி சரஸ்வதியை பத்திரமாக மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Right Menu Icon