--- --:--:-- --

நாமக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணியின் போது தூண் இடிந்து விழுந்து விபத்து..!

8

நாமக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணியின் தூண் இடிந்து விழுந்ததில் 5 பேர் காயம் அடைந்தனர். நாமக்கல் ஆட்சியர் வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

 

இதில் சத்தியமூர்த்தி நிறுவனம் 120 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டி வருகிறது. நுழைவு வாயில் முகப்பு அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிலிருந்த தூண் மற்றும் முன் பகுதி நேற்று முழுவதுமாக இடிந்து சேதமடைந்தது.

 

இந்த விபத்தில் வடமாநில தொழிலாளர்கள் 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கட்டுமான பணியில் தரமற்ற கம்பிகள் மற்றும் சிமெண்ட் பயன்படுத்தப்படுகிறதா என்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்த கட்டுமான பணியை செய்து வரும் சத்தியமூர்த்தி நிறுவனத்தின் உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

இதற்கிடையே கட்டுமான பணியில் விபத்து ஏதும் ஏற்படவில்லை என்றும் வெல்டிங் விட்டுப் போனதால் அதிகாரிகள் ஒரு பகுதியை இடித்தனர் என்று அமைச்சர் தங்கமணி விளக்கமளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon