அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் கவிழ்ந்த விபத்தில் 140 பேர் பலி..!
செனகல் நாட்டில் அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் கவிழ்ந்த விபத்தில் 140 பேர் பலியாகினர். ஸ்பெயினின் கேனோரி தீவுகளுக்கு சென்று அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் திட்டத்துடன் அகதிகள் ஏராளமானோர் கப்பல்களில் பயணிப்பது வாடிக்கையாக உள்ளது.
அதை போல செனகல் நாட்டில் எம்பா பகுதியிலிருந்து கேனேரி தீவுகளுக்கு அகதிகள் 20 பேரை ஏற்றிக்கொண்டு கடந்த சனிக்கிழமை கப்பல் ஒன்று புறப்பட்டுள்ளது. அந்த கப்பல் செயிண்ட்லூயே அருகே வந்தபோது திடீரென தீப்பிடித்து மூழ்கியுள்ளது. விபத்தில் 140 பேர் பலியாகியுள்ளனர்.






