--- --:--:-- --

புதுக்கோட்டைக்கு வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி..!

10

சிங்கப்பூரில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த 35 வயதான ஒருவர் சிங்கப்பூரில் இருந்து வந்துள்ளார்.

 

திருச்சி விமான நிலையத்தில் அவரை பரிசோதித்ததில் குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பது தெரியவந்ததை அடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து சொல்லிக்கொள்ளாமல் புறப்பட்ட அந்த நபர் புதுக்கோட்டையின் அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் புகார் அளித்ததையடுத்து அந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய ரத்த மாதிரிகள் பூனே
ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Right Menu Icon