--- --:--:-- --

புல்லட் வாகன ஓட்டி மீது லாரி மோதி உயிரிழப்பு..!

3

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கார் மோதி கீழே விழுந்த புல்லட்டு வாகன ஓட்டுனர் மீது லாரி மோதி உயிரிழந்தார். கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே பந்தளம் என்சிசி சாலையில் பிரதீப் தனது புல்லட்டில் சென்ற போது முன்னால் சென்ற கார் மோதி புல்லட் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளது.

 

இதில் பின்னால் வந்த மினி லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

தொடர்ந்து விபத்திற்குப் பிறகு நிற்காமல் சென்ற லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி ஓட்டுனரை கைது செய்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon