ரயில்வே கேட் மூடும் போது வேகமாக கடக்க முயன்ற அரசு பேருந்து..!
நெல்லை அருகே ரயில்வே கேட்டை மூடும் போது வேகமாக கடக்க முயன்ற அரசு பேருந்து ரயில்வே கேட் மீது மோதியது. தூத்துக்குடியில் இருந்து நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து பாளையங்கோட்டை குல வணிகர் குளம் ரயில்வே கேட் அருகே சென்றது.
அப்பொழுது ரயிலின் வருகைக்காக ரயில் கேட் மூடப்பட்டது. அப்பொழுது தண்டவாளத்தை அதிவேகமாக கடக்க வேண்டிய அரசு பேருந்து ரயில்வே கேட்டின் மீது வேகமாக மோதியது. ரயிலில் கேட் மூடிய போதும் நிற்காமல் சென்ற பேருந்து ஓட்டுனர் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





