--- --:--:-- --

விவசாய நிலத்தை ஆக்கிரமித்து திமுக உறுப்பினர் காலில் விழுந்து கெஞ்சும் விவசாயி..!

9

திருவண்ணாமலையில் பஞ்சாயத்துக்கு சொந்தமான பாதையை மீட்டு தரக்கூடிய ஆய்வுக்கு வந்த அதிகாரிகளின் காலில் வந்து விவசாயி கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். விவசாயி ஆன இவர் அதே கிராமத்தில் விவசாயி விவசாயம் செய்து வருகிறார்.

 

வறுமை காரணமாக நிலத்தை விற்க ஹரி கிருஷ்ணன் முடிவு செய்த நிலையில் திமுக வார்டு உறுப்பினர் ராஜேந்திரன் குறைந்த விலைக்கு நிலத்தை கேட்டதாக தெரிகிறது. ஆனால் விவசாயி நிலத்தை தர மறுத்ததால் ஆத்திரமடைந்த திமுக வார்டு உறுப்பினர் விவசாயி நிலத்திற்கு செல்லும் கிராம பஞ்சாயத்திற்கு சொந்தமான பாதையை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியதாக கூறப்படுகிறது.

 

இதையடுத்து அதிகாரிகள் தான் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அதிர்ச்சி அடைந்த விவசாயி ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கு வந்த அதிகாரிகளின் காலில் விழுந்து கதறி அழுதார். இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon