--- --:--:-- --

சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது மோதிய கார்..!

6

தெலுங்கானாவில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது வேகமாக வந்த கார் மோதி 3 பேர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

சிட்டியாலா சந்திப்பில் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மூன்று பேர் சாலையை கடக்க முயன்றனர். அப்போது வேகமாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது பலமாக மோதியது. மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

 

நேராக வந்துகொண்டிருந்தபோது குறுக்கே பைக் வந்ததால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து நடந்ததாக கூறப்படும் நிலையில் கார் ஓட்டுனரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon