சாலைக்கு வந்த சிறுத்தையுடன் செல்பி எடுத்த மக்கள்..!
இமாச்சல பிரதேச பள்ளத்தாக்கு பகுதியில் நெடுஞ்சாலையில் சிறுத்தை நடமாடுவதால் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. திடீரென தோன்றிய சிறுத்தையை கண்ட வாகன ஓட்டிகள் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சிறுத்தையை விரட்டிவிட முயற்சித்தனர்.
சிலர் ஆபத்தை உணராமல் சிறுத்தையுடன் நெருங்கி நின்று செல்போன்களில் படம் எடுத்துக் கொண்டனர். சிறுத்தை சென்ற பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.







