தொண்டையில் சிக்கிய 5 ரூபாய் நாணயம்.. உயிருக்கு போராடிய சிறுவன் உயிரை காத்த மருத்துவர்கள்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் காமராஜர் நகர் பகுதியில் சேர்ந்த சிவா – விஜயபிரியா தம்பதியினரின் 10 வயது குழந்தை வினீத் வீட்டில் விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது கையில் வைத்திருந்த ஐந்து ரூபாய் நாணயத்தை எதிர்பாராதவிதமாக வழங்கியுள்ளான்.
இதனை கண்ட அவரது உறவினர்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து பார்த்த பொழுது தொண் டை பகுதியில் ஐந்து ரூபாய் நாணயம் சிக்கி இருந்தது உறுதியானது.
இந்த நிலையில் தொண்டை பகுதியில் சிக்கி கொண்டிருந்த நாணயத்தை அறுவை சிகிச்சை செய்யாமலே அப்புறப்படுத்தி மருத்துவர்கள் அசத்தியுள்ளனர். சிறுவனின் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் மருத்துவர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





