--- --:--:-- --

17 வயது சிறுமிக்கு இன்ஸ்டாவால் வந்த வினை..!

10

தேனியில் instagram மூலம் பழக்கம் ஏற்பட்ட 17 வயது சிறுமியின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் பதிவிட போவதாக மிரட்டியை இளைஞரை போக்சோவில் கைது செய்தனர்.

 

உளுந்தூர்பேட்டை உளுந்தாண்டவர் கோயில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் instagram மூலம் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருடன் நெருங்கி பழகி வந்த நிலையில் சிறுமி தன்னுடைய புகைப்படத்தை இளைஞர்களுக்கு ஷேர் செய்ததாக தெரிகிறது.

 

இதனிடையே சில நாட்களுக்கு முன்பு சிறுமி உளுந்தூர்பேட்டைக்கே வந்து இளைஞருடன் தங்கியதாகவும் சிறுமியின் பெற்றோர் சிறுமியை கண்டித்து அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் சிறுமியின் பெற்றோருக்கு போன் செய்த இளைஞர் 70 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய நிலையில் பணம் தரவில்லை என்றால் சிறுமியின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்டு விடுவதாக பயமுறுத்தியுள்ளார்.

 

இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் இளைஞர் சதீஷ்குமாரை போக்சோவில் கீழ் கைது செய்த போலீசார் அதனை நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon