--- --:--:-- --

திருநங்கைகளுடன் பேஸ்புக்கில் பழக்கம்.. ஆசை வார்த்தையை நம்பி கோவை சென்ற 17 வயது சிறுவன்..!

10

மூக வலைதளம் மூலம் திருநங்கைகளுடன் ஏற்பட்ட பழக்கத்தில் கோவை வரவழைக்கப்பட்டு திருநங்கை கும்பலில் சிக்கிய இளைஞரை புகாரின் அடிப்படையில் போலீசார் மீட்டிருக்கின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயது இளைஞர் பத்தாம் வகுப்பு படித்தவரும் நிலையில் பேஸ்புக் மூலம் திருநங்கைகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 

இதில் கோவை மாவட்டம் சூலூர் பள்ளிபாளையத்தை சேர்ந்த கும்பல் ஒன்றுடன் whatsappல் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இந்த நிலையில் இளைஞரிடம் ஆசை வார்த்தைகள் கூறி கும்பல் சூலூர் வரவழைத்ததாக கூறப்படுகிறது.

 

இதில் சூலூர் வந்த இளைஞரிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை கும்பல் பறித்ததும் பெண்கள் அணியும் ஆடைகளை கொடுத்தும் இரவு நேரங்களில் சாலையில் நிற்க வைத்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

 

இதையடுத்து இளைஞரை வெளியில் செல்ல விடாமல் தடுத்த நிலையில் அருகில் இருந்தவரின் செல் போன் மூலம் தன்னை காப்பாற்றும்படி வாட்ஸ் அப்பில் தந்தையிடம் இளைஞர் பேசிய ஆடியோ வெளியானது. இதையடுத்து சூலூர் வந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

 

அதன் அடிப்படையில் கும்பலை பிடித்து விசாரணை நடத்திய போலீசாரிடம் இருந்து இரண்டு சவரன் நகைகளை கைப்பற்றி இளைஞரை மீட்டு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

 

Right Menu Icon